சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளதாகவும் 4 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவகள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் Fribourg மாகாணத்தில் உள்ள Flamatt என்ற நகரில் தான் இந்த கோரமான விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று முன் தினம் அதிகாலை 6 மணியளவில் Dudingen நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காரில் A12 நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளார்.
வாகனம் புறப்பட்ட 15 நிமிடங்களுக்கு பிறகு தெரியவராத சில காரணங்களால் சாலையை விட்டு விலகிய அந்த கார் விதி முறை மீறி எதிர் திசையில் சென்றுள்ளது.
அப்போது, எதிரே வந்த வேன் மீது அந்த கார் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டிய வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
வேனில் பயணம் செய்த 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டதால், 3 ஆம்புலன்ஸ் ஹெலிகொப்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தது.
உயிரிழந்தவர் மற்றும் காயம் அடைந்தவர்கள் பற்றிய விரிவான தகவல்கள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் விபத்தை தொடர்ந்து காலை 9 மணி நேரம் வரை சாலையின் இருபுறமும் தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.