எதிர்வரும் 9ம், 10ம், 11ம் திகதிகளில் சூரிச் நகரில் சிறிலங்கா கலாச்சார விருந்துபசார நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
அந்நிகழ்வில் பங்குபற்ற வேண்டாம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ஓர் இனத்தின் விடுதலை என்பது வெறுமனே நிலப்பரப்பு மட்டுமல்லாது மொழி, கலை, கலாச்சாரம் என்பனவும் இணைந்ததே.
தாயகத்தில் எமது நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து மொழி, கலை, கலாச்சார,பண்பாட்டு விழுமியங்களை இலங்கை அரசு சிதைத்து தமிழர்களை அவலவாழ்வுக்கு தள்ளிவிடுகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளனர்.