சுவிஸ் மலையில் மோதி வெடித்து சிதறிய சிறிய ரக விமானம்

172

சுவிட்சர்லாந்தில் விமான கிளப் நடத்திய இளைஞர் முகாமில் பங்கேற்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தி விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும், விமானியும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 17 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Engadineயில் உள்ள Diavolezza மலைப்பகுதியிலேயே இந்த விமான விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவிஸ் விமான கிளப் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான கோடை முகாமில் பங்கேற்ற பைபர் பிஏ 28 என்ற சிறிய ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமான கிளப் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் விபத்து நடந்த பகுதி மலை என்பதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்த மலையில் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

SHARE