சுவையான ரெசிபி “Ragu di Ricciola”

178

625-500-560-350-160-300-053-800-748-160-70

கடல் உணவை விரும்பி சாப்பிடும் நபர்களுக்கான அசத்தலான ரெசிபி.

தேவையான பொருட்கள்
  • Ricciola -Amber Jack மீன்
  • Olio – எண்ணெய்
  • Vino Bianco – வெள்ளை வைன்
  • Semi Anice – சின்னச்சீரகம்
  • Sedano – செலரி
  • Cariandolo – மல்லி
  • Apola Bianco – வெள்ளை வெங்காயம்
  • Carote – கரட்
  • Finocchio – பெரிய சீரகம்
செய்முறை

Ricciola மீனை துப்பரவு செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்தல் வேண்டும்.

கரட், செலரி என்பவற்றை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்தல் வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மீன் தலை,சின்னச்சீரகம்,பெரிய சீரகம்,கொத்தமல்லி,வெள்ளை வெங்காயம் 100g போட்டு, பின்பு வெட்டி வைத்த கரட் 70g செலரி 100g என்பன சேர்த்து அடுப்பில் கொதிக்கவிடுதல் வேண்டும்.

பின்பு எண்ணெய் கொதிக்கும் தருணத்தில் வெள்ளை வைன் விட்டு 5 நிமிடம் கொதிக்க விடுதல் வேண்டும். பின்பு தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் கொதிக்கவிடுதல் வேண்டும்.

பின்பு மீன் தலையை எடுத்து விட்டு அவற்றை வடித்து வேறொரு பாத்திரத்தில்போட்டு, தலையில் காணப்படும் சதையுடன் வெட்டி வைத்த கரட், சலரி, வெட்டி வைத்த மீன் இவற்றையும் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுதல் வேண்டும்.

SHARE