சூப்பரான ஸ்நாக்ஸ் காளான் 65 செய்வது எப்படி

293
சூப்பரான ஸ்நாக்ஸ் காளான் 65

காளான் 65
தேவையான பொருட்கள்

காளான் – 200 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
சோள மாவு – 25 கிராம்
தனியா பொடி – 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி – 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – தேவையான அளவு
சீரகம் தூள் – கால் தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
தயிர் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

காளான் 65

செய்முறை :

முதலில் காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, தனியா பொடி, கரம்மசாலா பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மிளகு துள், சீரக தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.

பொடி வகைகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதனுடன் நறுக்கிய காளானைச் சேர்த்து ஒரு சேர பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். காளான் கலவை கெட்டியாக இருக்கும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த காளானை போட்டு வறுத்து எடுக்கவும். இவ்வாறு எல்லாக் காளானையும் பொரித்து எடுக்கவும்.

சுவையான காளான் 65 தயார்.

குறிப்பு: காளான் கலவை தயார் செய்யும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. காளானில் இருக்கும் தண்ணீரே கலவை தயார் செய்யப் போதுமானது. காளான் கலவையை அரை மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் காளான் கலவை நீர்த்துப் போகும். விருப்பமுள்ளவர்கள் சோயா சாஸ், சில்லி சாஸ் ஆகியவற்றை மாவுக்கலவையில் சேர்த்து காளான் கலவை தயார் செய்யலாம்.

SHARE