சூப்பர் மகள்’ என்ற விருதைப் பெற்ற டிடி மற்றும் வரலட்சுமி சரத்குமார்

138

தொகுப்பாளினி டிடி மற்றும் வரலட்சுமி சரத்குமாருக்கு ‘சூப்பர் மகள்’ என்ற விருது கிடைத்துள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சி எப்போதுமே ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

எந்த ஒரு புது நிகழ்ச்சியாக இருந்தாலும் தன்னுடைய ஸ்டைலில் கலக்கிவிடுவார். அப்படி தான் எங்கிட்ட மோதாதே என்கிற புதிய நிகழ்ச்சியை சூப்பராக நடத்தி வருகிறார். அண்மையில் பெண்களுக்காக நடத்தப்பட்ட ஒரு விருது விழாவில் ‘சூப்பர் மகள்’ என்கிற பெயரில் ஒரு விருது டிடி, உத்ரா உன்னி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுஇ என்னுடைய அம்மாவை கௌரவம் செய்ததற்கு நன்றி என பதிவு செய்துள்ளார் டிடி.

SHARE