ரஜினிகாந்த் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றாலே அவரை சுற்றி கேமரா வெளிச்சம் குவிந்துவிடும். இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட ஜெயலலிதா மீண்டும் இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார்.
இதற்காக தமிழகத்தில் பல இடங்களில் இருந்த அவருடைய கட்சி தொண்டர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி பல திரைப்பிரபலங்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதில் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் முதல் வரிசையிலேயே அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி சிவக்குமார், அர்ஜுன், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.