சிம்பு ஒரு படம் நடித்து முடித்து அது வெளிவருவதற்குள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றது. தற்போது தான் வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என தொடர்ச்சியாக படங்களை கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகின்றார்.
ஆனால், இதற்கு முன் சிம்பு இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இழந்துள்ளார் தெரியுமா?, ஆம், ஆர்யா-மாதவன் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட்டாகிய வேட்டை படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது சிம்பு தான்.
பிறகு ஒரு சில பிரச்சனைகளால் அந்த படத்திலிருந்து விலக தற்போது வரை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு படம் செய்வது பெண்டிங்கில் உள்ளது.
அதேபோல் தமிழ் திரையுலகையே கலக்கிய கோ படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்க கமிட் ஆனார்.
வில்லனாக வினய் நடிப்பதாக கூறப்பட்டது, பிறகு அதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, அந்த படமும் கைமாறியது.