சூரிய ஒளியிலிருந்து ஜதரசன் எரிபொருள்

248

சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஜதரசன் எரிபொருள் தயாரிக்கும் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளனர்.

தாவரங்களில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி இயற்கையாக நடைபெறும் ஒளித்தொகுப்பச் செயன்முறையின்போது நீர் மூலக்கூறானது ஜதரசன் மற்றும் ஒட்சிசனாக உடைக்கப்படுகிறது.

இதேபோன்ற செயற்கையான ஒளித்தொகுப்பு நுட்பம் கடந்த தசாப்தங்களாக நடைமுறையிலிருந்தாலும், அது சக்தியை உருவாக்கவென இதுவரையில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

காரணம் இதற்கு ஊக்கிகள் தேவைப்படுவதாலும், அதேநேரம் ஊக்கிகள் பல குறைபாடுகளைக் கொண்டிருப்பதாலும் ஆகும்.

ஆனால் விஞ்ஞானிகள் தற்போது முன்வைத்துள்ள தொழில்நுட்பமானது மேற்படி செயற்கை ஒளித்தொகுப்புச் செயன்முறையுடன், இயற்கைத் தாவர நொதியங்களைப் பயன்படுத்தும் அரைச் செயற்கை ஒளித்தொகுப்ப முறையாகும்.

வளர்ந்துவரும் செயற்கை ஒளித்தொகுப்புச் செயற்பட்டில் இது ஒரு பெரிய மைல்கல்லாக அமையுமென ஆய்வாளர்கள் நம்பிக்கை தெருவிக்கின்றனர்.

SHARE