சூர்யாவின் பிறந்தநாளுக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட ‘வாடிவாசல்’ படக்குழு

225
சூர்யாவின் பிறந்தநாளுக்கு ‘வாடிவாசல்’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

சூர்யா
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான இன்று, தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இன்று உங்கள் பிறந்தநாள் என்றும் அது சிறந்த  நாள். இனிய இந்நன்னாளில் எல்லா நலமும் வளமும் பெற்று, தேக பலம், பாத பலம், ஆயுள் பலம் பெற்று வாழிய பல்லாண்டு” என வாழ்த்தியுள்ளார்.

SHARE