சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ்

127
விட்டுக்கொடுத்த சூர்யா.... நன்றி தெரிவித்த பிரபாஸ்

பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘சாஹோ’ திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பின்னணி பணிகள் தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 30-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. இதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘காப்பான்’ படமும் முதலில் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 30-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.
காப்பான், சாஹோ பட போஸ்டர்
இதனிடையே ஆகஸ்ட் 30ந் தேதி சூர்யாவின் ‘காப்பான்’ உள்பட ஒரு சில தென்னிந்திய மொழிப் படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததால் ‘சாஹோ’ படக்குழுவினர் சூர்யாவின் ‘காப்பான்’ படக்குழு உள்பட ஒருசில படங்களில் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.
‘சாஹோ’  படக்குழுவினர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ‘காப்பான்’ படக்குழுவினர் உள்பட ஒருசில படக் குழுவினர் தங்களது படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இதில் ‘காப்பான்’ செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதனனயடுத்து பிரபாஸ் உள்பட ‘சாஹோ’ படக்குழுவினர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பிரபாஸின் வலைப்பதிவு
இதுகுறித்து பிரபாஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: எங்களின் வேண்டுகோளை ஏற்று ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த அனைத்து படக் குழுவினருக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
SHARE