சரவணன் இன்று தமிழக குடும்பங்களில் ஒருவராக வாழ்ந்து வரும் சூர்யா. நடிகர்களில் மார்க்கெண்டயன் என்று அழைக்கப்படும் சிவக்குமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா முதலில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் தான் வேலைப்பார்த்து வந்துள்ளார்.
சினிமா இரத்தில் ஊறிய விஷயம் என்பதால் சும்மா இருப்பாரா, முதல் படத்திலேயே அப்போது திரையுலகில் பெண்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட விஜய்க்கு போட்டியாக நேருக்கு நேர் படத்தில் களம் இறங்கினார்.
முதல் படத்திலேயே வெற்றியை ருசிக்க, அதன் பின் பூவேல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் குடும்ப ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த ஜோதிகா தான் அவருடைய வருங்கால மனைவி என்பது அவருக்கே அப்போது தெரிந்திருக்காது.
இதன் பின் பல தோல்விகள், அப்பா பெயரை கெடுத்து விட்டார் என பல கடுமையான சொற்களை தாங்கி கொண்டு நந்தா படத்தில் மீண்டும் திரையுலகின் புதிய மனதனாக பிறந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
தன் கண் அசைவாலேயே அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார். இதை தொடர்ந்து காக்க காக்க, பேரழகன், உன்னை நினைத்து என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்தார்.
மகுடத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படம் தான் சூர்யாவின் திரை வாழ்க்கையை பல மடங்கு உயரத்திற்கு கொண்டு சென்றது. இப்படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகர்ளின் தரத்திற்கு கொண்டு செல்ல, ஆறு, வேல் என கமர்ஷியல் ருத்ரதாண்டவன் ஆடினார். பிறகு அப்படியே இதற்கு மாறாக ஒரு பக்கம் மௌனம் பேசியதே, வாரணம் ஆயிரம் போன்ற பங்களிலும் நடித்தார்.
சூர்யாவின் திரைப்பயணத்தை இன்று தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை ஆண்டு வரும் விஜய், அஜித்திற்கு நிகராக கொண்டு சென்ற படம் அயன். இதை தொடர்ந்து வெளிவந்த ஆதவன், சிங்கம். 7ம் அறிவு போன்ற படங்கள் சூர்யாவின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
ஆனால், சமீபத்தில் இவரின் அஞ்சான், மாஸ் போன்ற படங்களில் தோல்வி இவரை சோதித்து பார்த்தாலும் இதை விட பல மடங்கு கஷ்டத்தை வாழ்க்கையில் தாண்டி வந்த இவர், வெற்றியை ருசிக்க ’24’ மணி நேரமும் கடினமாக உழைத்து வருகிறார். கண்டிப்பாக் இந்த சிங்கம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸை வேட்டையாடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.