சூர்யா, ஜோதிகா சர்ப்ரைஸ் விசிட்..!

346

நிவின் பாலி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் காயம்குளம் கொச்சுண்ணி படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸாக சூர்யா, ஜோதிகா இருவரும் ஒன்றாக இன்று (நவம்பர் 26) விசிட் அடித்துள்ளனர்.

36 வயதினிலே, மும்பை போலீஸ் ஆகிய படங்களை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்குகிறார். கேரள மாநிலத்தில் 19ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்த கொச்சுண்ணி என்கிற திருடன் கதாபாத்திரத்தில் நிவின்பாலியும் அவருக்கு மனைவியாக அமலா பாலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மங்களூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு சூர்யா, ஜோதிகா ஒன்றாகச் சென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளனர்.

ரோஷன் ஆன்ட்ரூஸின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். பினோத் பிரதான் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

ஜோதிகாவுக்கு ரீ என்ட்ரி தந்த `36 வயதினிலே’ படத்தின் இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE