சினிமாவை பொறுத்தவரை அதிலுள்ள பிரபலங்கள் குறித்து உண்மையான செய்திகளும், கிசுகிசுக்களும் வந்துகொண்டே தான் இருக்கும். அடுத்தடுத்து இதுபோல நிறைய நிகழ்வதுண்டு.
தற்போது நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என சில தகவல்கள் வந்தது. ஒரு வீடியோவில் சூர்யா இஸ்லாமிய முறைப்படி தர்காவில் தொழுவது போல வெளியானது.
அந்த மாதிரியான வதந்திகளால் இப்போது உண்மை என்ன என்பது வெளியாகியுள்ளது. இதில் சூர்யா சிங்கம் 3 படப்பிடிப்பின் போது ஆந்திராவில் கடப்பா பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்ததால் அவருடன் அந்த தொழுகையில் கலந்துகொண்டாதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அவர் மதம் மாறவில்லை என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.