சூறாவளிக் காற்றால் விஸ்வரூபம் எடுத்த கடல் நீர்

174

இத்தாலியில் சுழற்காற்றில் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்ட ஆச்சரிய வீடியோ வைரலாகியுள்ளது.

Salerno கடற்கரை பகுதியில், கடலில் சுற்றி சுழன்று வரும் சூறாவளிக் காற்று ஒன்று கடல் நீரை வாரிச் சுருட்டி உறிஞ்சி எடுத்தது.

பல நூறு கனஅடி கொள்ளளவு கொண்ட அந்தக் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்ட சம்பவம் வானுக்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

இந்தக் காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.

இந்த ஆச்சரிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

SHARE