சூழ்ச்சிகாரர்களுடன் இணைந்தே தாம் ஆட்சி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் சியோல் நகரில் இலங்கைகர்களை சந்தித்து நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அந்தக் காலத்தில் எனது ஆட்சியின் கீழ் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் இந்த அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவி வகிக்கின்றனர்.
என்னுடன் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்த சில அமைச்சர்கள் இன்று மைத்திரியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
நான் பெற்றுக்கொண்ட கடன் தொகை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.அதனை நாட்டைப் பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடியும்.
நாம் ஒன்பது பில்லியன் ரூபா என தற்போதைய ஆட்சியாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.நாம் பெற்றுக்கொண்ட கடன் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் காட்டப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கம் அதனை விடவும் அதிகளவு கடனை குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்டுள்ளது.இந்தக் கடன் தொகைக்கு என்னவாயிற்று எனக் கேட்டால் வாங்கிய கடனை செலுத்தி வருவதாக கூறுகின்றார்கள்.
வேலை செய்ய முடியாவிட்டால் அனைத்து குற்றங்களும் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுக்களாக மாறுகின்றன.
நாம் நாட்டுக்கு நேர்மையாக கடமையாற்றியுள்ளோம், பொய் செய்ததில்லை.நாம் செய்த பணிகளில் ஒரு துளியேனும் இந்த அரசாங்கம் செய்யவில்லை என மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.