செக்ஸுக்கு மறுத்த 20 வயது பெண்ணை எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்பாக்தாத்: அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக்கொள்ள மறுத்த 20 வயது பெண்ணை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். 9 வயது சிறுமியைக் கூட பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு கொடூர மனம் படைத்தவர்களாக உள்ளனர் தீவிரவாதிகள். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களுக்கு இழைக்கும் கொடுமை பற்றி தெரிய வந்துள்ளது.