செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மழலைகளின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006 ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
குறித்த குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன். 129 பேர் காயமடைந்திருந்தனர்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும், நினைவு தின நிகழ்வுகள் எதிர்வரும் 14ஆம் திகதி யாழ் முனியப்பர் கோவிலடியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.