(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்)
அட்டன் கொழும்பு வீதியின் செனன் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவினால் அவ் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பகுதியிலே 17.08.2018 காலை மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
பிரதான வீதியிலுள்ள மண் மேட்டை அகற்ற அட்டன் பொலிஸாரும் அட்டன் நகர சபையினரும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தற்காலிகமாக கொழும்பு பழைய வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.