சென்னையில் இருந்து 47 இலஞ்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளை கடத்தி வந்த இலங்கை பயணி ஒருவரை இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை – மைலடி பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை 1.57 மணி அளவில் இந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
சந்தேகநபர் எடுத்து வந்த பயணப் பொதியில் சூட்சுமமான முறையில் 320 கிராம் ஹெரோயின் மற்றும் 52 கிராம் ஐஸ் ஆகிய போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், 7 நாள் தடுப்பு காவல் அனுமதியை பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.