சென்னையில் பைரவாவை முந்திய ஷாருக்கானின் ராயிஸ்- முழு வசூல் விவரம்

179

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். கடந்த வாரம் ஷாருக்கானின் ராயிஸ், ஹிரித்திக் ரோஷனின் காபில் மற்றும் தமிழ் படமான அதே கண்கள் திரைக்கு வந்தது.

தற்போதெல்லாம் ஹிந்தி படங்களுக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றது, அமீர்கானின் தங்கல் கிட்டத்தட்ட ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ராயிஸ் முதல் வார முடிவில் சென்னையில் ரூ 1.25 கோடி வசூல் செய்துள்ளது, பைரவா கடந்த வாரம் ரூ 1 கோடி வசூலுடன் மொத்தம் ரூ 6.6 கோடி வசூல் செய்துள்ளது.

ஹிரித்திக் ரோஷனின் காபில் ரூ 77 லட்சம் வசூல் செய்துள்ளது, அதே கண்கள் ரூ 30 லட்சம் வசூல் செய்துள்ளது, இவை அனைத்தும் சென்னை வசூல் நிலவரங்கள்.

SHARE