சென்னை அணியை வாங்கிய நடிகர் விஜயகாந்தின் மகன்

330
ஐபில்லை தொடர்ந்து  பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி கடந்த இரு ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்றதையடுத்து மூன்றாவது ஆண்டாக இந்த வருடம் நடைபெற உள்ளது.இந்த அணிகளுக்கான ஏலம் நேற்று இந்திய தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் சென்னை அணியை பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் எடுத்துள்ளார். இதற்கு Chennai Smashers என்று பெயர் சூட்டியுள்ளார்.

சென்னை அணியில் விளையாட பி.வி. சிந்து, சிக்கிரெட்டி, ஜெர்ரிசோப்ரா, கிருஷ்ணபிரியா ஆகிய இந்திய வீரர்களும், சோனி, சைமன்சன்டோசோ, பியா ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ்ஆட்காக், பிரான்ஸை சேர்ந்த பிரிஷ், கனடாவை சேர்ந்த டோபி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இந்த பிரீமியர்  லீக் பேட்மிண்டன் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியோடு வரும் ஜனவரி 2-ம் திகதி மும்பையில் ஆரம்பமாகிறது. இப்போட்டி மும்பையில் தொடங்கி சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது, இதன் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

சென்னை ஷ்மாஷர்ஸ் அணி இந்த தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் அதில் 50% தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக அளிப்பேன்என்றும் அணியின் உரிமையாளர் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்

SHARE