துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்ற டோனி

171

நடந்து முடிந்த 11-வது ஐபிஎல் சீசனில், இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் டோனி, இன்று திடீரென தியோரி கோவிலுக்கு சென்றார்.

அங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்ட அவர், தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தினார். அதன் பின்னர், சாமி கும்பிட்டு வந்ததும், அங்கு காத்திருந்த தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்காக அவர் காணிக்கை செலுத்தியுள்ளார்.

SHARE