சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமிக்கு திருமணம்

332

 

vijayaluxmi 4577dசென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் இன்று திங்கட்கிழமை காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்தில் தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இயக்குநர் ஃபெரோஸ், தூங்காநகரம் படத்திலும், வல்லினம் படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றியவர். தற்போது நடிகர் கிருஷ்ணா நடிப்பில் பண்டிகை என்ற படத்தை இயக்கி வருகிறார். –

SHARE