ஜெயலலிதா மரணமடைந்து ஒருமாதம் ஆன நிலையிலும் மர்மங்களுக்கு விடைகிடைத்தபாடில்லை.
அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் சின்னம்மா சசிகலாவின் காலில் விழுந்து கிடக்கின்றனர்.
சசிகலாவுக்காக ஜெயலலிதாவை கூட தரம்தாழ்த்தி பேசத்தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி இரவு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையி்ல் செப்டம்பர் 23ம் திகதி அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவுக்கு ஈமச்சடங்கு செய்த புரோகிதர் வருவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அன்றே அவர் அங்கு வந்தது ஏன்? மற்றவர்களை அனுமதிக்காத பொலிஸ் அவரை பார்த்தவுடன் பின்வாசல் வழியாக வருமாறு சைகை காட்டுகின்றனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.