செயற்கை உர நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

276

சிறுநீரக நோய்க்கு காரணமாக அமைந்துள்ள செயற்கை உர நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெறுகின்ற சிறுநீரக மாநாட்டிற்கு செயற்கை உர உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நடவடிக்கை தவறானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், சிறுநீரக நோய்க்கு எதிராக குரல் எழுப்பும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உடனடி பதிலை வழங்கியுள்ளதாகவும், அது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா லங்காசிறி செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

SHARE