பிரித்தானிய நாட்டில் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண் மீது மோகம் கொண்ட நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த பிபிசி தொலைக்காட்சியில் Emily Maitlis(45) என்ற பெண் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், எமிலிக்கும் அவரது தாயாருக்கும் அடிக்கடி கடிதங்கள் வந்துள்ளன.
அதில், ‘எமிலியிடம் பழக வேண்டும் எனவும், அவர் மீது தீராத காதல் இருப்பதாகவும்’ அந்த கடிதத்தில் Edward Vines(46) என்ற குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயலானது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. இந்நிலையில், எமிலியையும் அவரது தாயாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என நீதிமன்றம் கடந்த 2009ம் ஆண்டு எச்சரிகை செய்துள்ளது.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய அந்த நபர் எமிலிக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில், ‘கடிதம் அனுப்பும் நபர் தன்னை கற்பழித்து விட வாய்ப்புள்ளதாகவும், அவரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, எமிலிக்கு தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்த குற்றத்திற்கும் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை மீறிய குற்றத்திற்காகவும் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.