செல்போனில் மெதுவாக சார்ஜ் ஏறுவதை சரிசெய்ய எளிய டிப்ஸ்

47

 

நம்மில் பலர் செல்போன் தொடர்பில் எதிர்கொள்ளும் சிக்கல் சார்ஜ் மெதுவாக ஏறுவது தான்.

ஐபோன் ஆக இருந்தாலும் சரி, ஆண்ட்ராய்டு போனாக இருந்தாலும் சரி சார்ஜ் மெதுவாக ஏறுவது இயல்பான ஒன்றுதான்.

சார்ஜ் மெதுவாக ஏறுவதற்கு பல காரணிகள் உள்ளன. அவை என்னவென்று முதலில் பார்ப்போம்.

காரணிகள்
Charging Cable, Charger, Adapter குறைபாடு போன்ற தொழில்நுட்ப காரணங்களும், Charging Board-யில் உள்ள தூசு மற்றும் அழுக்கு ஆகியவையும் மொபைல் போன் சார்ஜ் பெறுவதில் பிரச்சனையை உண்டாக்கலாம்.

சில சமயங்களில் நமது மொபைல் செயலிகளில் Install செய்துள்ள செயலிகளினாலும் Charging Process தடைபடலாம்.

அதேபோல் மொபைல் போன்களில் Software Update-ஐ சரிவர செய்யாமல் இருக்கும்போதும் சார்ஜிங் பிரச்சனை ஏற்படும்.

சரி செய்யும் வழிமுறைகள்
முதலில் Cable-ஐ நன்றாக ஆராய வேண்டும். பின் வேறு மொபைல் போனை இந்த சார்ஜர் கொண்டு Charge போட்டு பார்க்கலாம்.

ஒருவேளை சார்ஜிங் பிரச்சனை ஏற்படவில்லை எனில், மொபைல் போனில் பிரச்சனை இருக்க வாய்ப்பு உள்ளது. இதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் வேறு ஒரு சார்ஜிங் Cable மூலம் உங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்ய வேண்டும்.

மேலும் மின்சார தடை ஏற்படும் வாய்ப்புகள் இருந்தால், சாதாரண அவுட்லெட்டில் சார்ஜரை சோதனை செய்வது நல்லது.

உங்களது போனில் Wireless Charging வசதி இருந்தால் அதற்கான சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஆகிறதா என்று சோதனை செய்யலாம். ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வு தான். அப்படியும் சார்ஜ் ஏறவில்லை என்றால் பேட்டரியில் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

சில சமயங்களில் செல்போனை Restart செய்வதும் சில பிரச்சனைகளை சரிசெய்யும். அதேபோல் போனை முழுவதுமாக Switch off செய்து பேட்டரியை சார்ஜ் செய்வது சிறப்பாக இருக்கும்.

SHARE