
செல்லக்கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றின் ஏரியிலிருந்து வெட்டுக்காயங்களுடன் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இவர்கள் யார் என்பது தொடர்பில் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும், இந்த சம்பவத்தில் 52 வயது மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஆண்களே கொல்லப்பட்டுள்ளதாகவும் செல்லக்கதிர்காம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.