செவ்வாயில் கியூரியாசிட்டி விண்கலப் பணிகள் நிறுத்தம்!!!

208

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த கியூரியாசிட்டி விண்கலத்தின் மையக் கணிப்பொறியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விண்கலம் தன்னுடைய ஆய்வுப் பணிகளை நிறுத்திக்கொண்டுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 22 கோடி கிலோ மீற்றர் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அமெரிக்கா – புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கன்வரால் விமானப்படை நிலையத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பப்பட்டது.

சுமார் 560 மில்லியன் கிலோ மீற்றர் தூரம் பயணத்தை மேற்கொண்டு கடந்த 2012ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விண்கலம் செவ்வாயில் இறங்கியது.

2012இல் இறங்கிய கியூரியாசிட்டி விண்கலம் கடந்த 5 வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந் நிலையில் தனது மையக் கணிப்பொறியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த விண்கலம் தன்னுடைய பணிகளை நிறுத்திக்கொண்டுள்ளது.

இதனால் செவ்வாயிலிருந்து தகவல்கள் முற்றாக விண்கலம் நிறுத்தியுள்ளது.

விண்வெளி விஞ்ஞானிகள் மையக் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரைவில் கண்டறிந்து சரி செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விண்கலத்தின் சூரிய சக்தியை 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

SHARE