செவ்வாய்க்கு பயணம்: 17 வயதான பெண்ணிறக்கு நாசா பயிற்சி.!

184

செவ்வாய் கிரகத்தில் காலடி வைக்க தயாராகி வருகிறார் 17-வயது பெண், அமெரிக்காவிலன் லூசியானா மாகாணத்தை  சேர்ந்த அலிஸ்ஸா கார்சன் என்பவருக்கு 13-வயது முதல் இப்போது வரை பயிற்சி அளித்து வருகிறது விண்வெளி ஆராய்ச்சிமையமான நாசா.

லிஸ்ஸா கார்சன், தொலைக்காட்சியில் விண்வெளிப்பாதை கார்ட்டூன் கதாபாத்திரங்களின் படங்களை பார்த்து தான் அதுபோல  விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை தூண்டியது என்று தெரிவித்தார். மேலும் அவர் தன் குழந்தை பருவத்தை ஒரு யதார்த்தமான கனவைப் பற்றிக்கொள்ள அவள் வாழ்க்கையின் சிறந்த முடிவை எடுத்துள்ளார் என்று அவர் தந்தை கூறியுள்ளார்.

செய்தி தொடர்பாளர் :

நாசா செய்தி தொடர்பாளர் கூறுகையில்,அலிஸ்ஸா கார்சனுக்குசெவ்வாய் கிரக பயணத்திற்கு இப்போது சரியான வயதுதான் ஆகிறது.உண்மையில் ஒரு விண்வெளி வீராங்கணையாக வளம் வருவார். அதற்கு தற்போது சரியான முடிவு எடுத்துள்ளார். அதற்கு நாங்கள் சரியான வழிமுறைகளை பயிற்சி கொடுத்து வருகிறோம் என்றார்.

தந்தை கூறியது.!

இது குறித்து அந்த பெண்ணின் தந்தை கூறுகையில், விண்வெளி ஆபத்துக்கள் குறித்து அவளிடம் கலந்து ஆலோனை செய்துள்ளேன். அவள் அவளது முடிவில் திடமாகவும் 2033-ல் தனது கனவுகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளதாக தெரிவித்தார்.

சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் ;

மேலும் அந்த பெண்ணின் தந்தை தெரிவித்தது என்னவென்றால் அவளது விருப்பத்தை அறிந்து முழு ஊக்கம் அளித்து வருகிறோம் என்றார். அலிஸ்ஸா, கட்நத 12 ஆணடுகளாக ஸ்பெயின்,பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நடந்த நாசா விண்வெளி முகாம்களில் கலந்து கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முடிவில் உறுதிப்பாட்டை பார்த்து பல்வேறு சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சமூகவலைத்தளம்:

மேலும் அவர் பயற்சி செய்யும் புகைப்படம், வீடியோ போன்றவற்றை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பல்வேறு தொழில்நுட்பங்களை சார்ந்த பயிற்சிகளை விரைவாக கற்றுக்கொள்கிறார் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

SHARE