செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளமை தொடர்பிலும், உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பிலும் ஆராய்வதற்காக கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலம் நாசா நிறுவனத்தினால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்மை தெரிந்ததே.
இவ் விண்கலமானது ஒரு வருடத்திற்கு முன்னர் அங்குள்ள பாறை ஒன்றில் துளையிட்டு அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலையில் மீண்டும் தற்போது பாறை ஒன்றின் மேற்பரப்பில் துளையிட்டு அதன் மாதிரிகளை கியூரியோசிட்ட ரோவர் விண்கலம் சேகரித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பினை துளையிட்டு ஆய்வு செய்தல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றமையினால் ரோவர் விண்கலத்தின் உட்பகுதியல் இரு ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப் பகுதியில் மணல் மற்றும் ஏனைய கனிமங்கள் தொடர்பாக இராசாயன மற்றும் கனிய ஆய்வுகளினை மேற்கொள்ள முடியும்.