கொட்டாதெனிய சேயா செவ்தமனி என்ற சிறுமி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மினுவன்கொட நீதவான் குறித்த மாணவரை விடுதலை செய்யுமாறு இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
போதியளவு சாட்சியங்கள் இன்றி பிழையான வகையில் மாணவரை கைது செய்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மாணவர் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இருவரிடமும் மரபணு சோதனை நடத்தியதன் ஊடாக அவர்கள் சம்பவத்துடன் நேரடித்தொடர்பு பேணவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் மாணவரை விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.