சேற்றில் முளைக்கும் செந்தாமரை போல ஒரு இனவாத அரசில் இருந்தும் சில நல்ல மனிதர்கள் வேற்று மொழியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்

232

 

முதலில் இவ் இராணுவ அதிகாரிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை இருந்தாலும் இவ் இராணுவ அதிகாரியின் பிரியாவிடை நிகழ்வானது பல செய்திகளை உணர்த்திவிட்டு சென்றிருக்கிறது என்பது மறக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை.

அவ்வகையில் இவற்றை இனவாத பதிவுகளாக சித்தரிக்கும் தமிழ் உணர்வாளர்களின் தழிழர் மீதான பற்றிற்கு தலைவணங்குகிறேன். உங்களில் ஒருவனாக நானும் தமிழின் மீதும், தமிழ் தேசியத்தின் மீதும் பற்றுக்கொண்டவன் தான்.

இருப்பினும் சேற்றில் முளைக்கும் செந்தாமரை போல ஒரு இனவாத அரசில் இருந்தும் சில நல்ல மனிதர்கள் வேற்று மொழியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்

நாங்கள் இறுதி யுத்தத்தில் பல இசைப்பிரியாக்களை இழந்திருக்கிறோம், பல பச்சிலம் பாலகர் உற்பட ஏராளமான உறவுகளை இழந்திருக்கிறோம், எனது உறவுகளை கூட இழந்திருக்கிறேன். அதற்காக இவ் தினைக்களத்தில் வேலை பார்க்கும் உறவுகளை வேசிகளாகவும், விரோதிகளாகவும் சித்தரிக்கும் தமிழ் உணர்வாளர்களே ஒன்றை ஏற்றுக் கொள்ளுங்கள், அங்கு வேலைபார்க்கும் பாதிப்பேர் முன்னைநாள் எமது போராளிகள் எமது விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்.

அவ்வாறானவர்கள் இன்றைய தமிழ்த்தலைமைகளால் கைவிடப் பட்ட பின்னர் தான் அவர்கள் தமது வாழ்க்கைப் போராட்டத்திற்காக இவ்வாறான அமைப்புக்களை தேர்வு செய்தார்கள். அதைவிட எமது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தால் சாதிக்க முடியாததை இவ் இராணுவ பிரதிநிதிகள் சாதித்துக்காட்டி இருக்கிறார்கள். அவ்வாறான ஒரு அமைப்பின் பிரியாவிடை நிகழ்வு தான் நடைபெற்றது என்பது சகிக்க முடியா உண்மை.

ஒரு பிரியாவிடை நிகழ்வில் இவ்வாறான ஓர் நிகழ்வு சாதாரணம்.
அவர்கள் தமிழர்களின் எதிரிக்கு பிரியாவிடை செய்யவில்லை தங்கள் நிறுவன தலைவரிற்கு பிரியாவிடை செய்துள்ளார்கள்.

ஒன்றை ஏற்றுக் கொள்ளுங்கள் போர்க்களத்தில் பிடிபட்ட சிப்பாயை கூட எங்கள் தலைவன் எதிரி என்று கூறி சுட்டுக்கொள்ள உத்தரவிட வில்லையே. மாறாக அவனை கௌரவமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தான் அதற்காக தலைவரை விரோதி எனலாமா?

இவ் நிறுவன அதிகாரி ஒரு தலைமைக்குரிய பண்புகளை கொண்டு அவ் ஊழியர்களின் மனங்களை வென்றிருக்களாம் அவ்வாறான வெளிப்பாடே இப் பிரியாவிடை நிகழ்வு.

தயவுசெய்து இதை ஒரு பக்கமாக விமர்சனம் செய்யும் தமிழ் பற்றாளர்களே இவ்வாறு நீங்கள் விமர்சனம் செய்து அவர்களை ஒதுக்க, பிழையாளிகளாக்க முயற்சிக்காதீர்கள், ஏனென்றால் அவர்களுக்கு இப்போது உணவு போடுவது தமிழ்த்தேசியமும் தமிழர் மீதான பற்றும் அல்ல அவர்களினுடைய அந்த உழைப்புதான்

SHARE