இந்தியா அவுஸ்திரேலியாவை விட அதிகம் ஸ்கோர் எடுத்தும் தோல்வி அடைந்துள்ளது என சேவாக் கூறியுள்ளார் .

145

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்த காரணம் குறித்து வீரேந்திர சேவாக் கிண்டலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகள் இடையில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்த முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 16.1 ஓவர்கள் ஆடி முடித்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 17 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது அந்த அணி.

டக்வொர்த் – லெவிஸ் – ஸ்டெர்ன் முறைப்படி இந்திய அணியின் இலக்கு 17 ஓவர்களில் 174 என மாற்றப்பட்டது.

இதை சேஸ் செய்த இந்தியா 17 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அவுஸ்திரேலியாவை விட இந்தியா அதிக ரன்கள் எடுத்தும் டிஎல்எஸ் முறைப்படி இந்தியா தோல்வி அடைந்தது.

இது குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா அவுஸ்திரேலியாவை விட அதிகம் ஸ்கோர் எடுத்தும் தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியின் ஸ்கோருடன் ஜிஎஸ்டி சேர்த்து விட்டார்கள் என கூறியுள்ளார் சேவாக்.

அவுஸ்திரேலியா 17 ஓவர்களில் எடுத்த 158 ரன்களோடு 15 ரன்களை டிஎல்எஸ் முறைப்படி சேர்த்துக் கொண்டதை தான் ஜிஎஸ்டி போட்டு விட்டார்கள் என சேவாக் கிண்டலடித்துள்ளார்.

SHARE