நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கையசைத்து சைகை காட்டி பேசிக்கொண்டுள்ளனர்.
சபைக்கு வருகைத்தந்த மகிந்த ராஜபக்ச, அவரது ஆசனத்தில் அமர்திருந்த நிலையில் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை பார்த்து கையசைத்து சைகை காட்டினார். எனினும் மகிந்த ராஜபக்ச தெரிவித்த சைகையை விளங்காத வகையில் அனுரகுமார சைகையால் தெரிவித்தார்.
இதனை அடுத்து ஆசனத்தில் இருந்து எழுந்த மகிந்த ராஜபக்ச, அநுரகுமார இருக்கும் இடத்தை நோக்கி வந்தபோது அநுரகுமார உடனடியாக மகிந்த ராஜபக்சவை நோக்கி விரைந்தார். இதனையடுத்து இருவரும் பேசிக்கொண்டனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்த்து பொது எதிரணியாக நாம் முன்னெடுக்கும் போராட்டங்களில் இதற்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை வழங்க முடியுமா, நாம் ஒன்றிணைந்து செயற்படுவோமா என அநுரகுமார திசாநாயக்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதற்கு பதில் கூறிய அநுரகுமார நீங்கள் இப்போது முன்னெடுக்கும் போராட்டத்தை நடத்துங்கள், இதில் எம்மால் கலந்துகொள்ள முடியாது. எனினும் அடுத்து வரும் போராட்டங்களில் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.