சொகுசு ஜீப்பில் மரக்குற்றிகள் கடத்தல்.  3 பிக்குகள் சிக்கினர்

540

மீமு­ரே­யி­லி­ருந்து வெவெல்­தெனிய பிர­தே­சத்துக்கு வந்த ஜீப் ஒன்றில் சட்­ட­விரோ­த­மாக மரக்குற்­றிகளை ஏற்றிச் சென்ற பிக்­கு கள் மூவ­ருடன் குறித்த ஜீப்பின் சார­தியையும் உடு­தும்­பர பொலி ஸார் கைது செய்­துள்­ளனர்.

குறித்த ஜீப்பில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கடத்தல் இடம்­பெ­று­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்­றை­ய­டுத்து குறித்த மரக்­குற்­றி­களை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இந்த சொகுசு ஜீப்பில் மரக்­குற்­றி­களை ஏற்றி அவற்றை மறைக்கும் வித்தில் சில நெல் மூடை­களை ஏற்­றப்­பட்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் உடு­தும்­பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.polices

SHARE