சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.

523

 

 

சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.

 jaya-sasiJayalalitha_6 sasikala- elavarasi- jaya- sudhakaran 1 ஜெயலலிதா-சசிகலா

இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும், அனைவரும் நிரபராதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமையான இன்று காலை 11 மணிக்கு சரியான எமகண்ட நேரமாகும். இந்த நேரத்தில் அளிக்கப்படும் தீர்ப்பு பாதகமாக வருமோ என்று அஞ்சினர் அதிமுகவினர். ஆனாலும் அஷ்டமி திதி என்பதால் ஓரளவு நம்பிக்கை இருந்ததாம்.

அஷ்டமி பூஜை அஷ்டமி திதி

எதிரிகளை வெல்லும் நாளாம். ராஜாக்கள் போருக்குப் போக அஷ்டமியில்தான் பூஜை செய்வார்களாம் மேலும் தீர்ப்பு வாசிக்கத் தொடங்கிய 11 மணி என்பது சுக்கிர ஓரையாம்.

நல்ல தீர்ப்பு

சுக்கிர ஓரையில் சுகமான தீர்ப்பினை அளித்துள்ளார் நீதிபதி குமாரசாமி என்கின்றனர் அதிமுகவினர்.ஏனெனில் எமகண்டமா? நல்ல நேரமா என்பதைவிட என்ன ஓரை என்பது முக்கியமாம். அந்த வகையில் சுக்கிர ஓரை சுபிட்சம் என்கின்றனர்.

14 ராசிதான் இது மட்டுமா?

தீர்ப்பு படிக்கும் கோர்ட் ஹால் நம்பர் 14. அதாவது கூட்டுத் தொகை 5. ஜெயல்லிதாவுக்கு இப்போதைய ராசி நம்பர் ஐந்தாம். ஆக, கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எங்களுக்கு ஜெயம் ஜெயமே என நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களின் நம்பிக்கை வீணாகவில்லை.

எமகண்டத்தை வென்றார் ஜெயலலிதா

எமகண்டத்தை வென்று வெளியே வந்துவிட்டார். இனி எல்லா நேரமும் நல்ல நேரமே என்கின்றனர் அதிமுகவினர். எப்படியெல்லாம் கணக்கு போடுறாங்கப்பா..!

பால் குடங்கள் வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகவும், மீண்டும் முதல்வராக வரவேண்டியும் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆயிரக்கணக்கில் பால் குடங்களை சுமந்தனர் அதிமுகவினர்.

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது இன்று காலை 11 மணிக்கு தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பை வழங்கினார். சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவை முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

ஜெயலலிதா சொத்து குவிப்பி வழக்கில் இருந்து விடுதலையானதை தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இன்று மாலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று 3 மணிக்கு நடைபெறுகிறது. அதில் முதல்-அமைச்சராக. ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பதவி விலகுகிறார்.  ஜெயலலிதா 17-ந்தேதி முதல்வராக  பதவி ஏற்கிறார். என தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் இன்று  பன்னீர் செல்வம, சபாநாயகர், துணை சபாநாயகர், மற்றும் மூத்த அமைச்சர்கள் ஜெயலாலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

SHARE