சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்: 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

119

 

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

முதல் இன்னிங்ஸ்
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி The Gabba, Brisbane மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ஜோஷ்வா டி சில்வா 79 ஓட்டங்கள் குவித்தார், அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில், உஸ்மான் கவாஜா 75 ரன்களிலும், கேரி 65 ரன்களிலும் குவித்தனர், மேலும் 9 விக்கெட்டுகளுடன் 289 ஓட்டங்கள் குவித்து இருந்த போது டிக்ளேர் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸ்
இதையடுத்து 22 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஒற்றை ஆளாய் நின்று போராடி 91 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமார் ஜோசப்(Shamar Joseph) சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 207 ஓட்டங்களுக்கு 2வது இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதுடன் டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

SHARE