சொன்னா நம்பமாட்டீங்க… நாம் சாப்பிடும் இந்த உணவுகளில் விஷம் உள்ளது என்று தெரியுமா?…

257

நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் விஷம் இருப்பதில்லை. ஆனால் நாம் செய்யும் சில தவறுகளால், ஆரோக்கியமான உணவுகளும் விஷமிக்கதாகின்றன.

உதாரணமாக, நாம் மொத்தமாக வாங்கும் உருளைக்கிழங்குகளை, பல நாட்களாக சேகரித்து வைத்திருக்கும் போது, அது முளைக்கட்ட ஆரம்பித்தால், அத்தகைய உருளைக்கிழங்கு விஷத்தன்மை மிக்கதாக மாறியுள்ளது என்று அர்த்தம்.

இதுப்போன்று நாம் சாப்பிடும் நிறைய உணவுகள் நம்மை அறியாமல் செய்யும் சில தவறுகளால் விஷத்தன்மையாகின்றன. இங்கு அத்தகைய உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உருளைக்கிழங்குகள்

உருளைக்கிழங்குகளை நீண்ட நாட்கள் வைத்திருந்தால், அவை முளைக்கட்ட ஆரம்பித்துவிடும். உருளைக்கிழங்குகள் முளைக்கட்ட ஆரம்பித்தால், அது விஷமிக்கதாக மாறிவிட்டது என்று அர்த்தம். அதேப்போல் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷம் உள்ளது. இப்படிப்பட்ட உருளைக்கிழங்குகளை சாப்பிட்டால், அது வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை உண்டாக்கும்.

பாதாம்

பாதாமில் சில கசப்பாக இருக்கும். பாதாம் கசப்பதற்கு அதில் சையனைடு என்னும் விஷம் உள்ளதென்று அர்த்தம். மேலும் நிறைய ஆய்வுகளில், அளவுக்கு அதிகமாக கசப்பான பாதாமை உட்கொண்டால், அது இறப்பிற்கு வழிவகுக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

செர்ரிப் பழங்கள்

செர்ரிப் பழங்கள் ஆரோக்கியமானது தான். ஆனால் அதில் உள்ள விதைகள் ஹைட்ரஜன் சையனைடு உள்ளது. இந்த விதைகளை உட்கொண்டால், அது பயங்கர விளைவை சந்திக்க வைக்கும்.

தக்காளி

தக்காளியில் விஷம் இல்லை. ஆனால் அதன் தண்டு மற்றும் இலைகளில் க்ளைகோ அல்கலாய்டு உள்ளது. ஆகவே தக்காளியைப் பயன்படுத்தும் போது, அதில் தண்டுகள் மற்றும் இலைகள் இருந்தால், அவற்றை வெட்டி நீக்கிவிடுங்கள்.

மரவள்ளிக் கிழங்கு

மரவள்ளிக் கிழங்கில் சையனைடு உள்ளது. இதனை சமைக்கும் முன் ஊற வைக்காமலோ, நன்கு வேக வைக்காமலோ இருந்தால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

லிமா பீன்ஸ்

லிமா பீன்ஸில் சையனைடு உள்ளது. இதனை பச்சையாக சாப்பிட்டால், அது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். ஆகவே இதனை வாங்கினால், நன்கு வேக வைத்து, பின் உட்கொள்ளுங்கள்.

காளான்

அனைத்து வகையான காளான்களும் ஆரோக்கியமானது அல்ல. சில வகை காளான்களில் விஷம் நிறைந்திருக்கும். எனவே ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து, சரியானதை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

 

SHARE