நியூசிலாந்தில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நியூசிலாந்தின் கோல்டன் பே கடற்கரையிலே இவ்வாறு திமிங்கலங்கள் கரை ஒதுங்கிவருகின்றன.
இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
உயிரோடு இருக்கும் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டுவிடும் பணியை திறம்பட செய்து வருகின்றனர் தன்னார்வலர்கள்.
1985ம் ஆண்டுக்கு பின்னர் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.