கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று கல்குடாவில் இடம்பெற்றது.
இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும் இன்று ஆயிரக்காணக்கான பொது மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நடைபெற்றன.
நேற்று முன்தினம் கல்குடா கடலில் குளிக்கச்சென்று நேற்று காணாமற்போன, 18 மற்றும் 21 வயதான சகோதரர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.
இந்நிலையில், கடலில் மூழ்கி பிள்ளைகள் இருவர் உயிரிழக்க, அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தந்தை வே.சண்முகம், தாய் யோகலட்சுமி, மகன்களான சுரேஷ் மற்றும் சதீஸ்குமார் ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றது. கல்குடா பொது மயானத்தில் நால்வரின் சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டன.