சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டே நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் சிகிச்சைகளுக்கான அனைத்து செலவீனத்தையம் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடாத்திய இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சோபித்த தேரருக்கு மேலதிக சிகிச்சைகளை சிங்கப்பூரில் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.