மறைந்த மாதுலுவே சோபித தேரர் எதிர்பார்த்த நியாமயான சமூகத்தை கட்டியெழுப்பு அர்ப்பணிப்படன் செயற்படப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கத் தெரிவித்துள்ளார்.
சோபித தேரரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
நியாயமான சமூகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் வரையறுக்கப்படாது நடைமுறையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதல் தடiவாயக சாதாரண பிரஜை ஒருவருக்காக அரச மரியாதையுடன் கூடிய இறுதிக் கிரியைகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சோபித தேரர் ஏதேனும் ஓர் பௌத்த பீடத்தின் பீடாதிபதியோ, கிறிஸ்தவ, இஸ்லாம் இந்து மதத் தலைவர்களில் ஒருவரோ அல்லது அரச தலைவரோ கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகப் பெரிய செல்வந்தரோ அல்லது முக்கிய பிரமுகரோ கிடையாது எனவும், எனினும் சமூகத்திற்கு பாரியளவில் சேவையாற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் பேதமோ அல்லது இனத மத குல பேதங்களோ இன்றி நாட்டையும் நாட்டு மக்களையும் சமூகத்தையும் சீர்ப்படுத்துவதில் அதீத கரிசனை கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய்வாய்ப்பட்டு முடியாத நிலையில் இருந்த காலங்களிலும் நாட்டின் நலன் பற்றியே அவர் பேசியதாக பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.