சோம்பேறி நாடுகள் பட்டியலில் இந்தியா 39 வது இடத்தை கைப்பற்றியது!

239

உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலைகழகம் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது என தெரியவந்துள்ளது.இந்தியாவில் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 4297 அடி மட்டுமே நடக்கிறார்கள். அதிகபட்சமாக சீனர்கள் நாள் ஒன்றிற்கு 6880 அடிகள் நடக்கிறார்கள். மிக குறைந்த அளவாக இந்தோனேசிய மக்கள் 3513 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள்.

மேலும் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் மிக குறைந்த அடிகளே தினமும் நடக்கிறார்கள். ஆண்கள் ஒருநாளைக்கு சராசரியாக 4606 அடிகளும், பெண்கள் 3684 அடிகளும் நடக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. சீனர்களை விட இந்தியர்களே உடல் பருமன் அதிகம் கொண்டவர்களாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியர்கள் சிறிது தூரம் நடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தங்களது உடலுக்கு போதிய உடற்பயிற்சி இல்லாததால் அவர்களுக்கு உடலில் பல்வேறு வலிகள் ஏற்படுகிறது. இதனால் தங்கள் வேளைகளில் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. இதுவே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

SHARE