நயன்தாரா படங்கள் என்றால் ஏதோ முன்னணி ஹீரோவிற்கு நிகராக எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது. நேற்று வெளிவந்த அறம் டீசர் கூட ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இவர் அடுத்து நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இப்படத்தில் இவர் ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இதற்காக ஸ்பெஷல் ட்ரையினிங் நயன்தாரா மேற்க்கொள்ள உள்ளாராம், டோரா படம் எதிர்ப்பார்த்த வெற்றி இல்லை என்றாலும், சோலோ ஹீரோயின் தான் இனி என முடிவெடுத்துவிட்டார் போல.