
ஜனாதிபதியின் ஊவா மாகாண விசேட திட்டப் பணிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இன்று முற்பகல் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
தெங்கு அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது, சிலாபம் மற்றும் குருணாகல் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இலட்சத்து 7 ஆயிரத்து 500 ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் மே தின ஊர்வலத்திற்காக ரி.சேர்ட்களில் அச்சிட்டதாக ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.