ஜடேஜா போன ராஜ்கோட் அணி என்ன ஆகப் போகிறதோ?

282

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த அணிகளுக்கு பதிலாக புதிய அணிகளாக புனே, ராஜ்கோட் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு அணிகளுக்கும் சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து 10 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அணியில் இருந்து 7 பேரும், ராஜஸ்தான் அணியில் இருந்து 3 பேரும் இந்த புதிய அணிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

புனே அணியில் டோனி, ரஹானே, அஸ்வின், ஸ்டீவன் சுமித், டுபிளசி இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் ராஜ்கோட் அணியில் ரெய்னா, ஜடேஜா, மெக்குல்லம், பால்க்னர், பிராவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜ்கோட் அணிக்காக தெரிவு செய்யப்பட்ட 5 பேரில் 4 பேர் சகலதுறை வீரர்கள் ஆவர். இதனால் அந்த அணி பலம் பெற்றுள்ளது.

இந்தியாவின் வெற்றி அணித்தலைவர் என அழைக்கப்படும் டோனி புனே அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல் ராஜ்கோட் அணியில் தலைவராக மெக்குல்லம் அல்லது சுரேஷ் ரெய்னா தெரிவு செய்யப்படலாம்.

இதற்கிடையில் ஜடேஜா சென்ற ராஜ்கோட் அணி என்ன ஆகப் போகிறதோ? என்று ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

27 வயதான சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜா இதுவரை 3 ஐ.பி.எல். அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். அவர் சென்னை, ராஜஸ்தான் மற்றும் கொச்சி அணிக்காக ஆடியுள்ளார்.

இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொச்சி டஸ்கர்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்தே நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டது.

தற்போது அவர் சென்றிருக்கும் ராஜ்கோட் அணிக்கு 2 ஆண்டுகள் கழித்து என்ன நடக்க போகிறதோ என்பது தான் அவர்களின் கேள்வியாக உள்ளது.

SHARE