ஜனவரிக்கு பிறகு நோட்டுகள் செல்லாதது என மீண்டும் அறிவிக்கும் வாய்ப்பு பிரதமர் மோடி சூசக தகவல்?

303

 

ஜனவரிக்கு பிறகு நோட்டுகள் செல்லாதது என மீண்டும் அறிவிக்கும் வாய்ப்பு பிரதமர் மோடி சூசக தகவல்?

WASHINGTON, DC - SEPTEMBER 30: U.S. President Barack Obama meets with Indian Prime Minister Narendra Modi in the Oval Office of the White House September 30, 2014 in Washington, DC. The two leaders met to discuss the U.S.-India strategic partnership and mutual interest issues. (Photo by Alex Wong/Getty Images)

பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். தலைநகர் டோக்கியோ சென்ற அவர் 82 வயது ஐப்பான் மன்னர் அகிஹி டோவை சந்தித்தார்.
பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சிவில் அணுசக்தி உள்பட 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.டோக்கியோவில் இரு நாடுகளின் முக்கிய வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.ஜப்பான் பயணத்தின்  இறுதி நாளான இன்று டோக்கியோவில் ஷின்கான் செனில் ஓடும் அதிவேக புல்லட் ரெயிலில் பயணம் செய்தார்.  ஷின்கான் செனில் இருந்து கொபே வரை பயணம் செய்த அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபேயும் சென்று இருந்தார்.

இது ஒரு நட்புறவு பயணமாக அமைந்தது என வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ்ஸவரூப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அது குறித்த படங்களையும் வெளியிட்டுள்ளார். இதே தொழில் நுட்பத்தில் தான், மும்பை-அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோடி கூறியதாவது:

தீவிரமாக யோசித்ததே 500, 1000 ரூபாய் செல்லாது என்ற முடிவை எடுத்தேன. சாமான்ய மக்கள் சிரமபட்டாலும் பாராட்டத்தான் செய்கிறார்கள்.ரூபாய் நோட்டு செல்லாதது குறித்து முன்கூட்டியே யாரிடமும் தெரிவிக்கவில்லை என மோடி தெரிவித்து உள்ளார்.

மேலும்  அவர் கூறும் போது

இந்த நடவடிக்கை நாட்டை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று. யாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல.

சில குடும்பங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிலர் மருத்துவமனைகளுக்கு சென்று வர வேண்டிய கட்டாயம் உள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கெல்லாம் மிகுந்த சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் எனது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.”

இதே போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்குவதற்கு எளிதாக இருக்கும் என்றும் இதனால் எதிர்காலத்திலும் கருப்பு பண பிரச்சனை தொடரும் என எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, டிசம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் இதே போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என உறுதியாக சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய எவ்வளவு வரி கட்டவேண்டும்
தங்களிடமுள்ள ரூ 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் எந்த வித விரியும் செலுத்த தேவையில்லை..

5 லட்சம் டெபாசிட் செய்ய உதாரணமாக 2.5 லட்சம் போக மீதமுள்ள 2.5 லட்சத்திற்கு 10 சதவீகிதம் என 25 ஆயிரம் மற்றும் 2.5 லட்சத்திற்கு 200 சதவீகிதம் அபராதம்  ரூ 50 ஆயிரம் என மொத்தம் 75 ஆயிரம் கட்டவேண்டும்.

அதேபோன்று, ரூ 10 லட்சத்திற்கு மொத்த வரி ரூ 3லட்சத்து 75 ஆயிரம் கட்டவேண்டும்.
20 லட்சம் டெபாசிட் செய்ய ரூ 12 லட்சத்து 75 ஆயிரமும் 30 லட்சம் டெபாசிட் செய்ய 21லட்சத்து 75 ஆயிரமும்,

ரூ 40 லட்சம் டெபாசிட் செய்ய 30 லட்சத்து 75 ஆயிரம், ரூ 50 லட்சம் டெபாசிட் செய்ய ரூ 39 லட்சத்து 75 ஆயிரம் வரியாக செலுத்தவேண்டும்.

100 லட்சம் அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு 84லட்சத்து 75 ஆயிரம் வரி கட்டவேண்டும்.

ஒரு கோடி ரூபாய் பதுக்கல் பணம் வங்கியில் செலுத்துபவர்களுக்கு 15லட்சத்து 25 ஆயிரம் மட்டும் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

SHARE