இந்த வருடம் ஜனவரி மாதத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 4685 என தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதில் 1533 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 585 பேர் யாழ் மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 403 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் டெங்கு நோயின் அறிகுறிகளோடு சீகா என்ற புதுவகையான வைரஸ் நோய் பரவும் அபாயம் நாட்டிற்குள் ஏற்பட்டுள்ளதால், டெங்கு நுளம்புகள் பெருகாத வகையில் சூழலை வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை தொற்று நோய்ப்பிரிவின் வைத்திய நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.